Kerala | எமர்ஜென்சி வார்டுக்குள் கத்தியுடன் நுழைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. கேரளாவில் அதிர்ச்சி

Update: 2025-12-27 07:43 GMT

மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் உள்ள மருத்துவமனைக்குள், முஜீப் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கையில் கத்தியுடன் திடீரென நுழைந்ததால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து, அவரை ஊழியர்கள் வெளியே இழுத்துச் சென்றனர். மருத்துவமனையில் முஜீப் யாரோ ஒருவரை தேடியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த புகாரின்பேரில் முஜீப்பை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்