PM Modi | Harleen Deol | "மின்னும் Skin.." ரகசியம் கேட்ட ஹர்லின் டியோல்.. PM மோடிசொன்ன பதில்
பிரதமர் மோடியிடம் உங்கள் முகப்பொலிவிற்கு காரணம் என்ன? என்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லின் டியோல் கேள்வி எழுப்பியதால் சிரிப்பலை எழுந்தது.. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது அவரது ஸ்கின் கேர் (skin care) குறித்து ஹர்லின் டியோல் கேள்வி எழுப்பினார். இதற்குப் புன்னகைத்தவாறு பதில் அளித்த பிரதமர் மோடி, தான் ஸ்கின் கேர் (skin care) குறித்தெல்லாம் கவனம் கொள்வதில்லை என்று தெரிவித்தார். 25 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, மக்களின் ஆசிர்வாதம் தான் முகப்பொலிவிற்கு காரணம் என்றார்.