PM Modi "பீகார் குழந்தைகள் மருத்துவராக வேண்டுமா? குண்டராக வேண்டுமா?" - பிரதமர் மோடி

Update: 2025-11-09 02:52 GMT

"பீகார் குழந்தைகள் மருத்துவராக வேண்டுமா? குண்டராக வேண்டுமா?" - பிரதமர் மோடி பீகார் குழந்தைகள் மருத்துவர், பொறியாளராக ஆக வேண்டுமா அல்லது குண்டர்கள் ஆக வேண்டுமா? என்று பிரதமர் கேள்வி எழுப்பி உள்ளார். பீகார் சட்டப் பேரவைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சீதாமர்ஹியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது, ஆர்ஜேடி கட்சியினர் தங்கள் குழந்தைகளை முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக ஆக்க விரும்புகிறார்கள், ஆனால், மக்களாகிய உங்கள் குழந்தைகளை குற்றவாளிகளாக மாற்ற விரும்புகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார், பீகார் குழந்தைகள், மருத்துவராக உருவாக வேண்டுமா அல்லது குண்டராக ஆக வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, பீகாரை சேர்ந்த எந்தவொரு குழந்தையும் இனி குண்டராக உருவாகாது என்று தெரிவித்தார். பீகார் குழந்தைகள் இனி பொறியாளராகவோ, மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்