Non Veg | Food Delivery | அசைவ உணவுகளுக்கு NO - அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம் அதிரடி
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அசைவ உணவுகளை விற்பனை செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் அசைவ உணவு வழங்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராம் பாதையில் தடையை மீறி 20க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் இன்னும் இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.