Mohan Bhagwat ``ஒரு நாள் இரவில் நடக்காது“ - இந்தியா குறித்து RSS தலைவர் மோகன் பகவத் சொன்ன கருத்து
உலக நன்மைக்காக, இந்தியா விஸ்வகுருவாக வர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியா விஸ்வகுருவாக வேண்டியது காலத்தின் தேவை என்றும், அது ஒரு நாள் இரவுக்குள் நடந்து விடாது என்றும் தெரிவித்தார்.
இந்தியா விஸ்வகுருவாக பல்வேறு தளங்களில் அயராத உழைப்பை செலுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்த அவர், அதன் ஒரு தளம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்றும் தெரிவித்தார்.