Kerala | முதியவர் மீது மோதி மெடிக்கல் ஷாப்பிற்குள் புகுந்த கார் - பதறி ஓடி வந்த மக்கள்

Update: 2025-12-29 05:17 GMT

கேரள மாநிலம் கோட்டயத்தில் மெடிக்கல் ஷாப்பிற்குள் புகுந்த காரின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மன்னார்காடு பகுதியில் விஜயபுரம் கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான மருந்து கடை செயல்பட்டு வருகிறது.

அங்கு, தலப்பாடியை சேர்ந்த ஒருவர் தனது காரை நிறுத்தி இருந்த நிலையில், மீண்டும் இயக்கி உள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், மருந்து வாங்குவதற்காக வந்திருந்த முதியவரின் மீது மோதியது. 

Tags:    

மேலும் செய்திகள்