School Leave Update | Uttrapradesh | நடுங்கவிடும் குளிர் - உபியில் பள்ளிகளுக்கு விடுமுறை
உத்தரபிரதேசத்தில் பல்வேறு இடங்களில், கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கிரேட்டர் நொய்டா, காசியாபாத், மதுரா உள்ளிட்ட நகரங்களில், பனிமூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், குளிர்அலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.