Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.. பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...
- தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவத்தை முறையாக சமர்ப்பிக்காத10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை தொடங்கியது தேர்தல் ஆணையம்... தவறான ஆவணங்களை வழங்கினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
- கர்நாடகா மாநிலம் கார்வார் கடற்படை தளத்திற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொண்டார். அப்துல் கலாமிற்க்கு பிறகு நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 2வது குடியரசு தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
- ஃபிஜி முதல் காசி வரை தமிழ் மொழி இதயங்களை ஒன்றிணைப்பதாக ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்தார். 2026ஐ நோக்கி நாடு புதிய தன்னம்பிக்கையுடன் நடை போட தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
- வரும் 31ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.... 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது...