காசி விஸ்வநாதர் கோயிலில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு

Update: 2025-09-12 10:03 GMT

பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் சுவாமி தரிசனம் செய்தார். எட்டு நாள் பயணமாக இந்தியா வந்த அவர், பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தனது மனைவியுடன் வழிபட்டார். அப்போது உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலும் உடனிருந்தார். மொரிஷியஸ் பிரதமர் வருகையை ஒட்டி கோயில் வளாகத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்