திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. உடல் சிதறி பலியான 7 பேர்.. 48 பேர் நிலை? மகாராஷ்டிராவில் பயங்கரம்

Update: 2024-05-24 01:51 GMT

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த‌தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டோம்பிவிலியில் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. தீ விபத்து காரணமாக ஆலையின் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் சிதறியதோடு, கார் ஷோ ரூம் உட்பட 2 கட்ட‌டங்களுக்கும் தீ பரவியது. தகவலறிந்து, பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் சென்று, மீட்பு மன்றும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 48 காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாய்லர் வெடித்த போது, பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், விபத்துக்கு காரணமான 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, விபத்து நடந்த போது, பணியாளர்கள் தப்பித்து ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்