Karnataka Accident | நேருக்கு நேர் மோதிய ஜீப், பஸ்.. ஸ்பாட்டிலேயே 3 பேர் பலி

Update: 2026-01-24 06:22 GMT

தனியார் பேருந்து, ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே தனியார் பேருந்தும் - ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்கலா தாலுக்காவிற்கு உட்பட்ட மியாரு பகுதியில், தர்மஸ்தலாவில் இருந்து அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, எதிரே வந்த ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப் முற்றிலும் நொறுங்கிய நிலையில், படுகாயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்