சகோதரிகள் நகரத்தில் வசிக்க, நான் மட்டும் கிராமத்திலா?-விபரீத முடிவு
கர்நாடகாவில் தனது சகோதரிகள் திருமணமாகி நகர் பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில், தான் மட்டும் கிராமத்தில் வாழ்வதாக கூறி புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலபுரகி நகர் சித்தேஸ்வர் காலனியை சேர்ந்த "அனுசுயா அவினாஷ் அகடே" , 2 மாதங்களுக்கு முன் தனது மாமாவின் மகனை காதலித்து திருமணம் செய்த நிலையில், வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமான தனது சாகோதரிகள் 3 பேரும், பெங்களூரில் வசித்து வருவதால், தன்னால் நகர் பகுதியில் வாழ முடியவில்லை என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
Next Story
