Odisha | கலப்பு திருமணம் - பெண்ணின் உறவினர்கள் 40 பேருக்கு மொட்டையடித்த அவலம்.. ஒடிசாவில் அதிர்ச்சி

Update: 2025-06-22 07:16 GMT

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம், பைகனகுடா கிராமத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர், பட்டியலின இளைஞரை திருமணம் செய்ததாக தெரியவருகிறது. இதைக் காரணமாகக் கொண்டு, கிராம மக்கள் அப்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை சரிசெய்வதாக நினைத்து, விலங்கை பலியிட்டு சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 40 பேருக்கு மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலப்புத் திருமணத்திற்கான தண்டனையாக இந்த சடங்குகளை மிரட்டி செய்ய வைத்தது, அவலநிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்