Government Bus திடீரென அரசுப் பேருந்தை பாதி வழியில் நிறுத்தி ஓட்டுநர் செய்த செயல் | ஷாக்கான பயணிகள்

Update: 2025-05-01 12:16 GMT

கர்நாடகாவில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தொழுகை நடத்துவதற்காக, பேருந்தை பாதி வழியில் நிறுத்திய நிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்டார். ஹுப்ளி-ஹாவேரி சாலையில், ஜவேரி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. சாலையோரத்தில் அரசு பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், அதன் ஓட்டுநர் தொழுகை செய்யும் காட்சிகளை பயணிகள் தங்கள் செல்போனில் படம்பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்ப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்