பள்ளி மதிய உணவில் இறந்த நிலையில் கிடந்த பாம்பு - மயங்கிய குழந்தைகள்.. பீகாரில் அதிர்ச்சி
பீகார் மாநிலம் பாட்னா அருகே மொகமாவில் அரசுப் பள்ளியில் மதிய உணவில் இறந்த நிலையில் பாம்பு கிடந்த நிலையில், மதிய உணவு சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மயங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தாமாக முன்வந்து
விசாரணையை தொடங்கியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், மயக்கம் அடைந்த குழந்தைகளின் உடல்நிலை விவரம் உள்ளிட்ட விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய பீகார் மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.