வங்கக் கடலில் உருவான புயல்... இன்று மாலைக்குள் "ரீமால்" வலுப்பெறும் 135 கி.மீ வேகம்.. வானிலை கொடுத்த ஹை அலர்ட்

Update: 2024-05-25 07:26 GMT

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது... இது வங்கதேசத்தின் கெபுபாராவிற்கு தெற்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தென்-தென்கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் கேனிங்கிற்கு தெற்கு தென்கிழக்கே 530 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது... இன்று மாலைக்குள் மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடலில் ரீமால் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது... இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

நாளை நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தை ஒட்டிய கடற்கரைகளை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது... கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்