சென்னை டூ டெல்லி ரயில் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

Update: 2024-01-02 11:02 GMT

டெல்லியில் கடும் குளிரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடுமையான மூடுபனி நிலவுகிறது. இதனால் சென்னை-டெல்லி எக்ஸ்பிரஸ் உட்பட 26 ரயில்கள் டெல்லிக்கு தாமதமாக செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் குளிர் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரோஸ்ஷா சாலை உள்ளிட்ட இடங்களில், மக்கள் தீமூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்