பைக் ரைடர்களால் விபரீதம்..! ஒரே இடத்தில் அடுத்த‌டுத்து கவிழ்ந்த பஸ் நொறுங்கிய கார்..

Update: 2025-03-06 15:38 GMT

மகாராஷ்டிரா மாநிலம் லதூர் (Latur) மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விபத்து நடந்த அதே இடத்தில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்துள்ளது... அந்த காட்சிகளை முதலில் காணலாம்..

நாக்பூர் ரத்னகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை பைக்கில் வந்த நபரால், அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில், 6 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அதே இடத்தில் அதே போன்று பைக் ஓட்டியால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், கார் மோதியதால் பைக் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். காரில் வந்தவர்களும் படுகாயமடைந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்