சிறுத்தை கூண்டில் சிக்கிய விவசாயி மீட்பு
கர்நாடகாவின் கங்காவதி கிராமத்தில் சிறுத்தை கூண்டில் சிக்கிய விவசாயி 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதமாக ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க, ருத்ரா என்பவரது தோட்டத்தில் வனத்துறையினர் இரும்பு கூண்டு அமைத்தனர். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கிட்டி, கூண்டை காணும் ஆர்வத்தில் சென்று அதனுள் சிக்கிகொண்டார். தகவலறிந்து சென்ற வனத்துறையினர், விவசாயியை மீட்டனர்.