ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மனவேதனையை தருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனக்கு எப்போதுமே ரோட் ஷோக்களில் (ROAD SHOW) விருப்பம் இருந்தது இல்லை என்று கூறினார். நீங்கள் ரோட் ஷோவை நடத்துவதற்கு தயாராக இல்லை என்றால், நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கக் கூடாது என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.