Kerala | Love | "கமிட் ஆகணும்னு அவ்ளோ வெறி"பழைய டெக்னிக்கை கையிலெடுத்த காதலன்..இறுதியில் ட்விஸ்ட்

Update: 2026-01-08 11:05 GMT

காதலுக்காக விபத்து நாடகம் நடத்திய இளைஞரும், நண்பரும் கைது

விரும்பிய பெண்ணை காதலிக்க வைக்க திரைப்பட பாணியில் விபத்து நாடகம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பத்தனந்திட்டாவை சேர்ந்த ரஞ்சித் ராஜன் என்பவர், தான் காதலித்து வந்த பெண்ணின் இருசக்கர வாகனம் மீது நண்பரை வைத்து பைக்கில் மோத செய்துள்ளார்.

பின்னர், திரைபடங்களில் கதாநாயகன் வருவது போல் விபத்து நடந்த இடத்துக்கு தற்செயலாக வந்ததுபோல் காட்டிக்கொண்ட ரஞ்சித் ராஜன் பெண்ணுக்கு உதவி செய்துள்ளார்.

இதன் மூலம் பெண்ணின் மனதில் இடம் பிடித்துவிடலாம் என திட்டமிட்டிருந்தவருக்கு காத்திருந்தது ட்விஸ்ட்...

விபத்து குறித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ரஞ்சித் ராஜனின் நண்பர் உண்மையை உளற... விபத்து நாடகம் நடத்திய ரஞ்சித் ராஜனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்