ஹாஸ்பிடல் வாசலிலேயே குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி - ஜெராக்ஸ் கடைக்காரர் கைது

Update: 2025-06-08 02:24 GMT

ஓசூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஜெராக்ஸ் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த 43 வயதான ருத்ரேஷ் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைக்கூறி பழகி கர்ப்பமாக்கி உள்ளார். மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த ருத்ரேஷ், தான் மாட்டிக்கொள்வோம் என பயந்து மாணவியை பெற்றோருக்கு தெரியாமல் கர்நாடகா மாநிலம் ஜிகினியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ருத்ரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்