புதுச்சேரியில் நடைபெற்ற ஆபரேஷன் திரிசூலம் திட்டத்தின் கீழ், ஒரே நாளில் 78 ரவுடிகளின் மீது வழக்கு பதியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கு மாநிலம் முழுவதும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 3 நபர்கள் மீது ஆயுதம் வைத்திருந்த வழக்கும், 69 நபர்கள் மீது குற்ற தடுப்பு நடவடிக்கையின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.