இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-24 15:51 GMT

பிரதமர் அலுவலகம் ஆலோசனை

தமிழக மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை...

மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடியில் நாளை மறுநாள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்...

"கணக்கெடுப்பு முடிந்த பின் நிவாரணம்"

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்ட பின், முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை வழங்கப்படும்...

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தகவல்...

2 இளைஞர்கள் சடலமாக மீட்பு

திருச்செந்தூர் அருகே, கடந்த 18ஆம் தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு...

நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்...

இளம்பெண் எரித்துக் கொலை

சென்னை அருகே, காதல் தகராறில் கைகால்களை சங்கிலியால் கட்டி இளம்பெண் எரித்துக் கொலை...

திருநம்பியான முன்னாள் காதலனை இன்று கைது செய்து போலீசார் தீவிர விசாரணை...

நடிகர் போண்டா மணி மறைவு

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் காலமானார்....

திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இன்று நேரில் அஞ்சலி...

கடுங்குளிர் - பொதுமக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தின் உதகை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு...

காலை 9 மணிவரை கடுங்குளிர் நிலவியதால், பொதுமக்கள் அவதி...

மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் சஸ்பெண்ட்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிரடி சஸ்பெண்ட்...

விதிகளை மீறி போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டதற்காக விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை...

Tags:    

மேலும் செய்திகள்