Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-05-08 08:21 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை.

சாலையில் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் மக்கள் மகிழ்ச்சி..

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை.

இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தகவல்.

சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரம்..

எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பம்மல் டிபி ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு..

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ சோதனைக்காக மதுரைக்கு அனுப்பிவைப்பு..

ஒரு வாரத்திற்குள் தடய அறிவியல் அறிக்கை வந்தவுடன் மகனுடைய டிஎன்ஏ உடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடிவு எனத் தகவல்..

இவிஎம் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு..........

கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்..

Tags:    

மேலும் செய்திகள்