விளையாட்டில் தகராறு - மூர்க்கமாக தாக்கிய மாணவர்கள்

Update: 2025-09-05 17:47 GMT

குஜராத் மாநிலம் ஜுனாகர் பகுதியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை மாணவர் விடுதியில் சக மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு விரைந்த மாணவனின் பெற்றோர் தங்கள் மகனை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஜூலை 26 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்று இருந்தாலும் பள்ளி நிர்வாகத்தால் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தொடர்பாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 5 மாணவர்களின் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்