Chennai Girl `அன்பை' தேடி சென்ற 27 வயது சென்னை பெண் - பதிலாக கிடைத்த செங்கல் அடி.. ஆபாச வார்த்தைகள்
சென்னை விருகம்பாக்கம் பகுதியில், பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி செங்கல்லால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் 27 வயது பெண்ணுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக அன்பு என்பவர் பழகி வந்த நிலையில், திடீரென பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி கேட்க, அன்பு பணிபுரியும் அலுவலகம் அருகே சென்ற பெண்ணை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, செங்கல்லால் தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அன்புவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.