Salem | Fire | மது குடிக்க பணம் தராத தாய்.. வீட்டையே பஸ்பமாக்கிய மகன்..
சேலம் மாவட்டம் மேற்கு ஓலப்பாளையம் கிராமத்தில் தாய் மது அருந்த பணம் தராததால், சொந்த குடிசை வீட்டிற்கு தீ வைத்து விட்டு போதை ஆசாமி ரமேஷ் தப்பி ஓடியுள்ளார். இதனால் அடுத்தடுத்த 3 குடிசை வீடுகளும் தீ பற்றி எரிந்தது. மேலும் ஒரு லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சேதமடைந்தது. இந்த குடிசை வீடுகளில் வசித்து வந்த 3 மூதாட்டிகளையும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டதால் உயிர் தப்பினர்.