வேலூர் மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தில் சிறுமியை ஏமாற்றி கடத்திய குற்றவாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2024ம் ஆண்டு போக்கோ சட்டத்தின் கீழ் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.