இந்த தீபாவளி `DUDE' தீபாவளிதான் - அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

Update: 2025-05-12 02:14 GMT

Dude | Pradeep Ranganathan | இந்த தீபாவளி `DUDE' தீபாவளிதான் - அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே, டிராகன் படங்களுக்கு பிறகு தன்னோட மார்க்கெட்டை உயர்த்தி ஸ்டாரா ஜொலிக்கிறாரு பிரதீப் ரங்கநாதன்...

அடுத்ததா விக்னேஷ் சிவன் இயக்கத்துல LIK படத்துல நடிச்சி முடிச்சிருக்காரு பிரதீப் ரங்கநாதன்...

அடுத்து ஹீரோவா நாளாவது படத்துல, அறிமுக இயக்குநர் கீர்த்திஷ்வரன் இயக்குற படத்துல நடிச்சிட்டு வராரு.

பிரதீப்புக்கு ஜோடியா மமிதா பைஹு நடிக்க, சரத்குமார் முக்கிய கேரக்டர்ல நடிக்குறாரு.

இந்த படத்துக்கு DUDEநு டைட்டில் வச்சி வெளியான போஸ்டர்ஸ் ஃபேன்ஸை கவர, டீம் அதோட நிறுத்தல.. தொடர்ந்து போஸ்டர்ஸ் ரிலீஸ் பண்ணிட்டு இருக்காங்க..

இப்ப பிரதீப் - மமிதா பைஜு ஜோடியா இருக்குற போஸ்டரை ரிலீஸ் பண்ணி, Guts-ஓட ROMANCEநு பதிவை போட, போஸ்டர்ஸ் வைரல்...

இதுமட்டுமில்ல இந்த தீபாவளி DUDE தீபாவளினு இப்பவே ஹாஸ்டேக் போட ஆரம்பிச்சிட்டாங்க...

ஏற்கனவே மாரி செல்வராஜோட பைசன் படம் தீபாவளி ரிலீஸ்னு அறிவிக்கப்பட, சூர்யா - ஆர்.ஜே. பாலாஜியோட படமும் தீபாவளிக்கு ரிலீசாகலாம்னு எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்