நடிகை மனோரமா வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டிட கோரிக்கை
பழம்பெரும் நடிகை பத்மஸ்ரீ மனோரமா அவர்கள் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை
சூட்டிடக் தமிழக முதல்வருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது...
திரைக்கதைக்கு உயிர் கொடுத்து... பார்வையாளர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி... மறக்க முடியாத கதாபாத்திரங்களாக இன்றும் ரசிகர்களின் நினைவில் வாழ்பவர்கள் வெகு சிலரே... அதில் 'ஆச்சி மனோரமா'வுக்கு என்றுமே தனி இடம் உண்டு...
1958ல் 'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகியவர்... உலகிலேயே ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெண் நடிகர் என்ற கின்னஸ் உலக சாதனையும் படைத்து... தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத அடையாளமாக திகழ்பவர்...
இந்த நிலையில், மனோரமா அவர்கள் வாழ்ந்த தியாகராயர் நகரை சேர்ந்த நீலகண்ட மேத்தா தெருவிற்கு “மனோரமா தெரு” என்ற பெயரைச் சூட்டிட வேண்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.