காசோலை மோசடி வழக்கு - இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை காசோலை மோசடி வழக்கில் பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை, எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக, பேஸ்மான் பைனான்ஸ் நிறுவனத்திடம் 2016ம் ஆண்டு 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். இதையடுத்து கடனை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தும்படி, பேஸ்மான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லிங்குசாமி பேஸ்மான் நிறுவனத்திற்கு கொடுத்த காசோலை, வங்கியில் பணமில்லாததால் திரும்பி வந்துள்ளது. இதனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லிங்குசாமி மற்றும் அதன் இயக்குநர் சுபாஷ் சந்திரபோஸுக்கு எதிராக, பேஸ்மான் நிறுவனம் 2018ம் ஆண்டு காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் ஏழு ஆண்டு விசாரணைக்கு பின், தற்போது இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கடன் தொகை 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் லிங்குசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.