பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது கூந்தலை வெட்டி தானம் செய்துள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சவாரியா திரைப்படத்தின் மூலமாக இந்தி திரையுலகில் அறிமுகமான சோனம் கபூர், முன்னணி நடிகையாக வலம்வந்தவர். கடந்த 2018ம் ஆண்டு, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது தனது கூந்தலை வெட்டி தானம் செய்த வீடியோவை, சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.