Ranveer Singh | காந்தாரா கடவுளை கிண்டல் செய்தாரா ரன்வீர் சிங்? - படுவைரலாகும் வீடியோ
கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...
கன்னட திரைப்படமான ரிஷப் ஷெட்டியின் காந்தாராவின் 2 பாகங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது..
இதில் இடம்பெற்றுள்ள ஆக்ரோஷமான முகபாவம் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும்...
இந்நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மேடையில் காந்தாரா காட்சியை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேலி செய்யும் வகையில் நடித்துக் காண்பித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.
கன்னடர்களின் தெய்வத்தை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக கூறி ரன்வீர் சிங் மன்னிப்பு கோர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.