பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் M.ராமனாதன் தனது 72 வயதில் காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய ராமநாதன், வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், உடன்பிறப்பு, வில்லாதி வில்லன், தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த ராமநாதனின் இறுதிச் சடங்கு புதன் அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.