Jana Nayagan | Soori | ஜனநாயகன் படத்துடன் போட்டியா? - யோசிக்காமல் சூரி சொன்ன நச் பதில்
யாருக்கும் யாரும் போட்டி கிடையாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணியில் தனது அம்மன் உணவகத்தின் 12 வது கிளையை திறந்து வைப்பதற்காக நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போட்டி என்பதே கிடையாது எனவும், அனைவருக்கும் ரசிகர்கள் ஆதரவு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சமீபத்தில் அவர், நடிகர் அஜீத்குமாரை சந்தித்து பேசியது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.