இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்

Update: 2024-05-23 16:16 GMT

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், ராம்சரண் உள்ளிட்ட திரைத்துறையினர் முக்கிய புள்ளிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் சங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் பிரமாண்டமாக இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1ம் தேதி இசைவெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த், ராம்சரண் மட்டுமன்றி இயக்குநர் மணிரத்னம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இந்தி நடிகர் ரன்வீர் சிங், மலையாள நடிகர் மோகன் லால் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்