புதிய அத்தியாயத்தை தொடங்கிய இளையராஜா... மேடையில் சொன்ன அந்த வார்த்தை.. அடுத்த நொடி அதிர்ந்த அரங்கம்

Update: 2024-05-22 07:57 GMT

புதிய அத்தியாயத்தை தொடங்கிய இளையராஜா... மேடையில் சொன்ன அந்த வார்த்தை.. அடுத்த நொடி அதிர்ந்த அரங்கம்

ஆசை, கோவம், மகிழ்ச்சி, கவலை, காதல் என்று மனிதர்களின் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் தன் இசையால் உலகுக்கு உணர்த்திய ராகதேவன் இளையராஜா...

ஒரு காலத்தில் படத்தின் காட்சிக்குப் பின்னால் நிரப்பியே ஆகவேண்டும் என்ற கட்டாய சடங்காகத்தான் இருந்தது பின்னணி இசை...

அந்த சம்பிரதாயத்தை தகர்த்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், உளக்குறியீட்டையும் முன்னிலைப்படுத்தி திரைக்கதையின் ஓட்டத்துக்கேற்ப இசைக்கோர்வைகளைச் சேர்த்து அதை ரசிகர்களின் இதயத்தோடு இணைத்தவர் இளையராஜா..

தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற சிறிய கிராமத்தில் இருந்து வந்து இன்று உலகமே வியக்கும் இசை சக்கர வர்த்தியாய் வலம் வருகிறார் இசைஞானி இளையராஜா

1976ல் வெளியான அன்னக்கிளி படம் மூலம் திரைத் துறையில் தொடங்கிய இளையராஜாவின் இசை பயணம்...

48 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஒட்டுமொத்த

தமிழ் சமூகத்தின் இதய கீதமாக தொடர்கிறது...

நாட்டுப்புற பாடல் தொடங்கி... சிம்பொனிவரை மா பெரும் இசை சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்த இளையராஜா

தந்த திரை இசை பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்....

இளையராஜா எனும் ஆகச்சிறந்த ஆளுமையின்

பேராற்றலை பல நூறு ஆண்டுகள் பறைசாற்றும்

வகையில், அவரது பெயரிலேயே இசை ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி பள்ளியை தொடங்கி அசத்தியுள்ளது சென்னை ஐஐடி.

மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையத்திற்கான கல்வெட்டை அவரே திறந்து வைத்து அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைத்திருகிறார்...

முற்றிலும் மூங்கில்களை கொண்டு உருவாக்கப்பட உள்ள இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி, வரும் காலங்களில் இசைத் துறையில் பல ஜாம்பவான்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுகுறித்து மனம் நெகிழ பேசிய இளையராஜா, கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக வந்தேன்...ஆனால் இன்று வரை நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசை எனது மூச்சாக மாறிவிட்டது என்றார். மேலும் அவர் இந்த ஆராய்ச்சி மையத்தில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்றும் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மூன்று தலமுறை தமிழ் சமூகத்தின் ரகசிய காதலாய் வலம்வரும் இளையராஜாவின் இசையை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஐ.ஐ.டியின் முயற்சி இசை பிரியர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்