சர்ச்சை பேச்சு - நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்/இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்த சர்ச்சை பேச்சு குறித்து, நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்/ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகள் யாரையும் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல - நடிகர் விஜய் தேவரகொண்டா/கடந்த 26ல், ரெட்ரோ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து பேசினார்/500 ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்கள் சண்டை போட்டது போல், பாகிஸ்தானியர்கள் மூளை இல்லாமல் சண்டையிடுவதாக பேச்சு/மலைவாழ் மக்களை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியிருப்பதாக புகார் அளித்ததை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு/"எந்த ஒரு உள்நோக்கமும், யாரையும் புண்படுத்தவும், எந்த ஒரு சமூகத்தையும் குறி வைத்தும் பேசவில்லை" - விஜய் தேவரகொண்டா விளக்கம்