``எல்லாம் ஒருநாள் சுக்குநூறாக அடித்து நொறுக்கப்படும்’’ - தீயாய் பரவும் அமீரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
மக்களை சுரண்டும் டோல்கேட் எல்லாம் ஒரு நாள் அடித்து நொறுக்கப்படும் என இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிப்ரவரி 17 முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டில் FASTag மூலம் கட்டண வசூலின் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, FASTag கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால், ஓட்டுநருக்கு தனது கணக்கை ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்களுக்கு அவகாசம் வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள இயக்குநர் அமீர் டோல்கேட் எல்லாம் ஒரு நாள் அடித்து நொறுக்கப்படும் என தனது வாட்ஸ் அப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.