இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (23-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-23 16:13 GMT

ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துகளை பதிவிட்டு வருவது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து ரசிகர்களிடம் பேசினோம். விவரங்கள் இவை...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று நடைபெற்ற வைகாசி பிரம்மோற்சவ விழாவின் போது, வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னணியை விவரிக்கிறார் செய்தியாளர் தனராஜ்...

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்

அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் 'கண்மணி அன்போடு' பாடலை பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதேசமயம், இந்த பாடலுக்கான அனைத்து உரிமைகளையும், இரண்டு இசை நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

புனேவில் சொகுசு கார் மோதி 2 பேர் உயிரிழந்த வழக்கில், கார் ஓட்டிய 17 வயது சிறுவனின் ஜாமின் திடீர் ரத்து...

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்த நிலையில், வங்கக்கடலில் நாளை மறுநாள் ரீமால் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் பிரகாஷ்...

Tags:    

மேலும் செய்திகள்