இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-22 15:50 GMT

பிரபல யூ டியூபர் இர்ஃபான், கருவில் இருக்கும் தனது குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுவதாக அவர் உறுதி அளித்துள்ளார். செய்தியாளர்கள் சதீஷ்முருகன், தாயுமானவன் வழங்கிய தகவல்களை பார்க்கலாம்..

சதீஷ் முருகன், யூ டியூபர் இர்ஃபான் மன்னிப்பு கோரிய நிலையில், சுகாதாரத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? விசாரணை நடைமுறைகள் தொடருமா? விவரங்கள சொல்லுங்க..

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதி ஊர்வலம் மற்றும் மதச்சடங்குகள் இன்று நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

57 வயதில் கடலுக்குள் சென்றவர், 47 வயதாக திரும்பிய அதிசயம்....

நெல்லை அருகே அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என, போக்குவரத்து துறை இன்று விளக்கம் அளித்துள்ளது. செய்தியாளர்கள் ராமசுந்தரம், டெல்ஜின் வழங்கிய தகவல்கள் இவை...

Tags:    

மேலும் செய்திகள்