இன்றைய தலைப்பு செய்திகள் (24-05-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-05-24 15:54 GMT

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில், கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியதற்காக, தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் இன்று விளக்கம் அளித்துள்ளார். தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்...

கோவை ராணுவ குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என மின்சார வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் கார்த்திக்....

கேதர்நாத்திற்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர், திடீரென கட்டுப்பாட்டை இழந்த‌தால் பரபரப்பு....

டெல்ஜின், அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து காவல்துறை தரப்பில் என்ன விளக்கம் கொடுத்திருக்காங்க? கூடுதல் விவரங்கள சொல்லுங்க.

போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு, போலீசார் அபராதம் விதித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தொழிற்சங்கங்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளன. செய்தியாளர் டெல்ஜின் வழங்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்