இன்றைய தலைப்புச் செய்திகள் (24-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-05-24 13:56 GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்...

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை, மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ​ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 2வது குவாலிஃபயர் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் நிலையில், மைதானத்திற்கு ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்...

திருச்சி முக்கொம்பு மேலணையில் நாளை 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து, திருச்சி முக்கொம்பு அ ணைக்கு 2 ஆயிரத்து 100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும், காவிரி கரையோர பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், முக்கொம்பு மேலணையில் இருந்து நாளை கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்