இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.12.2025)

Update: 2025-12-18 14:06 GMT

தமிழகம், குஜராத் மாநிலங்களில் வாக்காளர்கள் வரைவு பட்டியல் நாளை வெளியாகிறது...வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்ற நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற வகை செய்யும், விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது...எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது...

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்...வேளாண் அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் மீது மசோதா நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு நிலவியது...

ஓமன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான The Order of Oman விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது...ஓமன் நாட்டின் சுல்தான் விருதை வழங்கினார்...

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்...

வேளாண் அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் மீது மசோதா நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு நிலவியது...

புத்தாண்டு விடுமுறைக்கு பின் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம் செய்யப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...பிப்ரவரிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்...

திருப்பூரில், திருப்பூர் குமரன் நினைவகம் அருகே பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் தள்ளுமுள்ளு...பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்...

தேர்தல் வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார்...2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனியின் வெற்றி செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது..

ஈரோடு விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து தொண்டர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்...

திமுக ஒரு தீய சக்தி எனக் கூறிய விஜய், தவெக ஒரு தூய சக்தி எனக் கூறினார்தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி எனவும் விஜய் தெரிவித்தார்...

பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பவர்கள் தான், தமது அரசியல் எதிரிகள் என விஜய் விளக்கம் அளித்தார்...களத்தில் இல்லாதவர்களை விமர்சிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்...

விஜய் என்றாவது செய்தியாளர்களை சந்தித்துள்ளாரா? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்...தன்னிடம் கேட்பது போல் தவெக தலைவர் விஜயிடம் கேள்வி கேட்பீர்களா என்றும் செய்தியாளர்களை பார்த்து அவர் கேள்வி எழுப்பினார்..

Tags:    

மேலும் செய்திகள்