இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16 -01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

Update: 2024-01-16 17:50 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 14 காளைகளை அடக்கி, பொதும்பு பிரபாகரன் முதலிடம்... முதல்வர் ஸ்டாலின் சார்பில் காரை பரிசாக வழங்கினார் அமைச்சர் மூர்த்தி...

11 காளைகளை பிடித்து, சின்னப்பட்டி தமிழரசன் 2ம் இடம்... இருசக்கர வாகனத்தை பரிசாக பெற்றார்...சிறந்த காளையாக புதுக்கோட்டை சின்னகருப்பு காளை தேர்வு...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு பெற்றது...

மதுரை மாவட்டம் எலியார்பத்தியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விபரீதம்...

மஞ்சுவிரட்டின் போது, மாடு முட்டி இளைஞர் ரமேஷ் உயிரிழப்பு...

திருக்குறளில் திருவள்ளுவர் அளித்த போதனைகள், காலத்தால் அழியாதவை என பிரதமர் மோடி புகழாரம்...

தலை சிறந்த தமிழ்ப்புலவரை நினைவு கூரும் வகையில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம் என்றும் தமிழில் பதிவு...

பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு பணிவான மரியாதை...

திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆளுநர் ரவி, எக்ஸ் தளத்தில் பதிவு...133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் தமிழ்நாட்டில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று, முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டை வலியுறுத்தியவர் வள்ளுவர் என்றும் புகழாரம்...

Tags:    

மேலும் செய்திகள்