இன்றைய தலைப்பு செய்திகள் (29-03-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-03-29 15:56 GMT

ஆயிரத்து 823 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்...

நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு எதிராக வரி தீவிரவாதம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் கண்டனம்...

நாளை நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு...


11 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்...

கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் எண்ணை பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் நடவடிக்கை என தகவல்...


தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக இன்று கலந்துரையாடினார் பிரதமர் மோடி...

தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று டெல்லிக்கு வர வேண்டும் என பேச்சு...


சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?

தருமபுரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கேள்வி...


அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு...

எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று பதிவு...

Tags:    

மேலும் செய்திகள்