இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-07 23:12 GMT

"தமிழகத்தில் இன்றைய தினம் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்..."

"இரண்டாவது நாளாக சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதாகவும், சென்னை வானிலை மையம் தகவல்...


கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில், ஐந்து கோடியே 60 லட்சம் ரூபாய் பறிமுதல்...

மூன்று கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகளும் பறிமுதல்... நகை வியாபாரி வீட்டில் நடைபெற்ற சோதனையில் சிக்கியதாக தகவல்...


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயிலில், 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்...

பணம் கொண்டு வந்த 3 பேரில் ஒருவர் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தகவல்...


ரயிலில் பணம் கொண்டு வந்த விவகாரத்தில் கைதான மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமின்...

நீதிமன்றத்திற்கு வந்து, 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று, தாம்பரம் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு...


சென்னை ரயிலில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்