காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-23 06:01 GMT

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, தமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு உத்தரவு........

கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை கொண்டுவரும் வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்ய ஆணை....


கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை..........

பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்12 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்....


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.....

சரணடைவதில் இருந்து விலக்கு கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்........


செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்..........

2021 ஆம் ஆண்டு யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான வழக்கில் ஆஜரானார்..........


நீலகிரியில் வன விலங்குகளை வேட்டையாடி வந்த மூன்று பேரை கைது செய்த வனத்துறை...

தலைமறைவாக உள்ள அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் உள்ளிட்ட மேலும் மூவருக்கு வலைவீச்சு...

Tags:    

மேலும் செய்திகள்