முன்னாள் காதலியை சரமாரியாக தாக்கியதாக புகார்- இளைஞர் கைது

Update: 2022-10-13 17:11 GMT

சென்னை அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் என்பவரும், 19 வயதான இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்துள்ள நிலையில், முகப்பேறு அருகே பெண்ணை வழிமறித்து மீண்டும் காதலிக்குமாறு மதன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி நடுரோட்டில் அடித்து உதைத்ததாக, பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்